
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஆறு, மிசௌரி (Missouri).
தவறு. மிசௌரி, வட அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய ஆறு; 3,767 கி.மீ. நீளம் கொண்டது. ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஆறு முர்ரே (Murray); இதன் நீளம் 2,508 கி.மீ. இது ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகி, அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. மிட்டா மிட்டா (Mitta Mitta), கீய்வா (Kiewa River), கௌல்பர்ன் (Goulburn River), டார்லிங் (Darling River) ஆகியவை இந்த ஆற்றின் முக்கிய துணையாறுகள்.
டியோன் (Dione) என்பது சனியின் துணைக்கோள்.
உண்மை. சனிக்கோளின் 83 துணைக்கோள்களில் இதுவும் ஒன்று. டியோன் சனியிலிருந்து 3,77,400 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிக்கோளை ஒருமுறை சுற்றிவர, பூமியின் நாட்களைப் போல 2.7 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இதன் விட்டம் 1124 கி.மீ. இதனுடைய சராசரி வெப்பநிலை - 186 டிகிரி செல்சியஸ். இதன் கருவம் (Core) கடினமான சிலிகேட் பாறைகளால் ஆனது.

