
நீலக் கால் பூபி (Blue footed booby) பறவைகளின் கால்கள் நீலநிறத்தில் இருக்கும்.
உண்மை. இப்பறவைகள் தங்கள் வித்தியாசமான நீல நிறமுடைய பாதங்களால் இப்பெயர் பெற்றன. ஆண் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் பெண் பறவைகளைக் கவர வித்தியாசமாக நடனம் ஆடும். இதனால் இவை ஸ்பானிய மொழியில் கோமாளி என்று பொருள்படும் 'போபோ' என்று பெயரிடப்பட்டன. பின்னர், இப்பெயர் பூபி ஆனது. இப்பறவைகளின் சிறகுகள் விரிந்தநிலையில் 5 அடி நீளம் இருக்கும். பெண் பறவைகள் ஆண் பறவைகளைவிட பெரியதாகவும், எடை அதிகமாகவும் இருக்கும். இவற்றின் அறிவியல் பெயர் சுலா நெபௌக்ஸி (Sula nebouxii).
ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய ஏரி வோஸ்டாக் (Vostok).
தவறு. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய ஏரி விக்டோரியா. வோஸ்டாக் ஏரி, அன்டார்டிகா கண்டத்தின் மிகப் பெரிய ஏரியாகும். நீள்வட்ட வடிவமுடைய இந்த ஏரியில், 5,400 கன கி.மீ. தண்ணீர் உள்ளது. இதன் மொத்த நீளம் 240 கி.மீ. அகலம் 50 கி.மீ. இது 1990ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

