PUBLISHED ON : மே 15, 2023

மைனாவின் முட்டை நீல நிறத்தில் இருக்கும்.
உண்மை. மைனாக்களின் முட்டை பொதுவாக நீலம், நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பிலிவெரிடின் (Biliveridin) என்னும் நிறமி தான் இதற்குக் காரணம். மைனாக்கள் முட்டையிடும் காலம் மார்ச் முதல் ஜூலை வரை ஆகும். இவை பொதுவாக, 2 - 5 முட்டைகள் வரை இடும். குஞ்சு பொரிக்க 2 வாரங்கள் ஆகும். தங்கள் கூடுகளை மற்ற பறவைகள், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருக்கும்.
வில்ஸன் நோய் என்பது வைரஸ்களால் ஏற்படும் நோயாகும்.
தவறு. வில்சன் நோய் (Wilson disease) என்பது, 30,000 பேரில் ஒருவரைப் பாதிக்கும் ஓர் அரிய வகை மரபணு நோயாகும். வில்சன் நோய் ஒரு நபரின் உடலில் தாமிரத்தை அதிகமாகச் சேர வைக்கிறது. நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களில் தாமிரம் உள்ளது. மனித உணவு விகிதத்தில் ஒரு சிறிய அளவு தாமிரம் இருப்பது உடல் நலனுக்கு முக்கியம். இருப்பினும், அதிக அளவு தாமிரம் உடலில் தேங்கினால், அது உறுப்புகளைச் சேதப்படுத்தும். வில்சன் நோயால், கல்லீரல், மூளை, கண்கள் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்படும் தாமிர சேமிப்பு காலப்போக்கில், மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்.
