தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரீலா? ரியலா?

ரீலா? ரியலா?

ரீலா? ரியலா?


PUBLISHED ON : செப் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூபியேசி என்பது பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம்.

உண்மை. ரூபியேசி (Rubiacea) குடும்பத்தில், 611 பேரினங்களும் அவற்றினுள் 13,100 சிற்றினங்களும் உள்ளன. பூக்கும் தாவரங்களில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது நான்காவது பெரிய குடும்பமாகும். 1789ஆம் ஆண்டில் முதன்முதலாக, ஆன்டனி லாரென்ட் தே ஜஸ்ஸியன் என்பவர், இத்தாவரக் குடும்பத்தைப் பற்றி எடுத்துரைத்தார். அன்டார்டிக் கண்டத்தைத் தவிர, உலகின் அனைத்துக் கண்டங்களிலும் இது காணப்படுகிறது.



ஹெப்படைடிஸ் ஏ, பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

தவறு. ஹெப்படைடிஸ் ஏ வைரஸால் ஏற்படுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் கடுமையான, தொற்றக்கூடிய நோய். ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் குறைவாகவோ, ஒன்றும் இல்லாமலோ இருக்கும். இந்த நோய் தொற்றியதில் இருந்து இரண்டு முதல் ஆறு வாரங்களில் அறிகுறிகள் தோன்றி, எட்டு வாரங்கள் வரை நீடித்திருக்கும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காய்ச்சல், வயிற்று வலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us