PUBLISHED ON : அக் 16, 2023

மூங்கில், புல் வகையைச் சார்ந்தது.
உண்மை. மூங்கில் உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்தது. ஆசிய நாடுகளின் வெப்பப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. மற்றவை, மரங்கள் போலவே இருக்கும். மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். பருமனோ 0.3 மீட்டர் இருக்கும். மூங்கில் பூ, காணக்கிடைக்காத மிகவும் அபூர்வமான ஒன்று. பாம்புஸா அருண்டாநாசியா (Bambusa Arundanacca) என்ற முட்களுடன் இருக்கும் மூங்கிலில், 50- முதல் 60 ஆண்டுகள் இடைவெளியில் மிக அபூர்வமாக பூ பூக்கும்.
டெங்கு பாதிப்பால் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்.
தவறு. டெங்கு பாதிப்பால் ரத்தத்திலுள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை தான் குறையும். இவற்றின் எண்ணிக்கையை வைத்தே நோயுற்றவரது ஆபத்து நிலையை அறிய முடியும். ஒருவருக்கு இயல்பு நிலையில் 3.5 லட்சம் வரை ரத்தத் தட்டுகள் இருக்கும். டெங்கு பாதிப்பால் ஒரு நாளைக்கு 50,000 வரை குறையும். ஒரு லட்சத்திற்குக் கீழே போனால், அவசர சிகிச்சை தேவை. ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக இருந்தால் மிகவும் ஆபத்து. இதற்கு, பப்பாளி ஒரு சிறந்த மருந்து. இதில் ரத்தம் உறைதலை ஊக்குவிக்கும் ஆன்டி ஹெமொரெஜிக் (Anti hemorrhagic) தன்மை உள்ளது.
