நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழுப்புத் திசுக்கட்டிகள் உடலில் வலியை உண்டாக்கும்.
தவறு. கொழுப்புத் திசுக்கட்டிகள் (Lipoma) என்பவை கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலி ஏற்படுத்தாத கட்டிகள் ஆகும். இவை மென்மையான திசுக்களினால் ஆனவை. கொழுப்புத் திசுக்கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக, நகரக்கூடியவையாக இருக்கின்றன. இவை வலியற்றவையாக இருக்கும். பல கொழுப்புத் திசுக்கட்டிகள் சிறியவை. அதாவது ஒரு சென்டி மீட்டர் விட்டத்திற்கும் குறைவாக இருக்கும். ஆனால், இவை ஆறு சென்டி மீட்டர்கள் வரை விரிவடையலாம். இவை பொதுவாக 40 முதல் 60 வயதுடையவர் களிடையே காணப்படுகின்றன. ஆனால் இவை குழந்தைகளிடமும் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.