உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 07, 2023
அ நிறம் | அளவு
டைபாய்டு காய்ச்சலைப் பற்றி அறிந்திருப்போம். இத்தொற்று சுகாதாரமற்ற உணவு, நீர், பாதித்த நபர்கள், விலங்குகள் வாயிலாகப் பரவுகிறது. சால்மோனெல்லா (Salmonella) வகை பாக்டீரியாக்கள் தான் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பல இனங்கள் உள்ளன, அவற்றுள் சிலவற்றையும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் பின்வருமாறு:
சால்மோனெல்லா டைஃபி - டைபாய்டு.
சால்மோனெல்லா பாராடைஃபி - டைபாய்டு.
சால்மோனெல்லா என்டரிக்கா - குடல் அழற்சி.
சால்மோனெல்லா என்ட்ரிடிஸ் - காய்ச்சல், வயிற்றுப்போக்கு.
சால்மோனெல்லா பாங்கோரி - காய்ச்சல், வயிற்றுப்போக்கு.
சால்மோனெல்லா காலரேசியஸ் - பன்றிகளில் வயிற்றுப்போக்கு.
