உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 02, 2016

அ நிறம் | அளவு
மங்கோலிய தலைநகர் உலான்பாடரில், ரியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கான தகுதிச் சுற்று நடந்தது. இதில் ஆண்கள் 'பிரீஸ்டைல்' 57 கி.கி. எடைப் பிரிவில் இந்தியாவின் சந்தீப் தோமர் பங்கேற்றார். இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வென்ற சந்தீப், ஒலிம்பிக் வாய்ப்புக்கான போட்டியில், உக்ரைனின் ஆன்ட்ரியட் சென்கோவை வீழ்த்தினார். இதன் மூலம், ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற 4ஆவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
