
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இத்தாலி ரோம் நகரில், 'இத்தாலி ஓபன் டென்னிஸ்' தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் எகடரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. இதில் துடிப்பாகச் செயல்பட்ட சானியா ஜோடி கோப்பையைக் கைப்பற்றியது. சர்வதேச அரங்கில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி கைப்பற்றிய 14ஆவது பட்டம் இது.

