PUBLISHED ON : பிப் 24, 2020
ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.
1) சீனாவுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடைய சொகுசு கப்பல் ஜப்பான் துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பெயர் என்ன?
அ) டைமண்ட் பிரின்சஸ்
ஆ) சில்வர்லைன் க்ரூஸ்
இ) ராயல் கரீபியன்
ஈ) ட்ரீம் ஜென்ட்டிங்
2) 80 வயதுக்கான முதுமை காரணமாக உயிரிழந்த, 8 வயதுடைய அன்னா சாகிடோன் (Anna Sakidon) என்ற உக்ரைன் நாட்டு சிறுமிக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவர் எந்த வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்?
அ) ஓல்டோரியா ஹன்டே (Oldoria Hunte)
ஆ) புரோஜீரியா (Progeria)
இ) வயோதிங் வாபே (Vayothing Vabe)
ஈ) சுல்மட்டோ (Sulmatto)
3) வெளியூரில் இருந்தாலும், ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது?
அ) அண்ணா பல்கலைக்கழகம்
ஆ) ஐ.ஐ.டி. மெட்ராஸ்
இ) சாஸ்திரா பல்கலைக்கழகம்
ஈ) ஐ.ஐ.டி. கொல்கட்டா
4) கணினியில், கீழ்கண்ட எந்த அம்சங்களை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி லேரி டெஸ்லர் தனது 74வது வயதில் காலமானார்?
அ) Cut(Ctrl+X), Copy(Ctrl+C), Paste (Ctrl+V), Find & Replace
ஆ) ஆட்டோ ஸ்பெல் செக்கிங் (Auto Spell Checking)
இ) ஸ்லீப் மோட் (Sleep Mode)
ஈ) ஆட்டோ ஷட்டவுன் (Auto Shutdown)
5) பணத்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பழைய கரன்சி நோட்டுகளை UV கதிர்வீச்சு செலுத்தி தூய்மைப்படுத்த எந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது?
அ) ஜப்பான்
ஆ) சீனா
இ) சிங்கப்பூர்
ஈ) மலேசியா
6) இந்தியாவின் எந்த மாநிலத்தில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன-?
அ) ஆந்திரம்
ஆ) ஒடிசா
இ) உத்தரபிரதேசம்
ஈ) பீகார்
7) ஏ.டி.எம். இயந்திரங்களில் ____________________நிரப்புவதை நிறுத்தும்படி வங்கிக் கிளைகளுக்கு இந்தியன் வங்கி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன?
அ) ரூ.2,000 நோட்டுகள்
ஆ) ரூ.200 நோட்டுகள்
இ) ரூ.500 நோட்டுகள்
ஈ) எதுவும் கிடையாது
8) முதன்முறையாக தெற்காசிய நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒருவர், அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெயர், மாநிலம் என்ன?-
அ) ஜப்பார் முகமது, கேரளம்
ஆ) ஸ்ரீ சீனிவாசன், தமிழ்நாடு
இ) தனா ரெட்டி, ஒடிசா
ஈ) முரளிதரன் பிள்ளை, ஆந்திரம்
9) தமிழகத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2018-ஐ காட்டிலும், 2019இல் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது?
அ) 1 மடங்கு
ஆ) 2 மடங்கு
இ) 3 மடங்கு
ஈ) அதிகரிக்கவில்லை, குறைந்துள்ளது
10) எந்த மாநில ரயில் நிலையம் ஒன்றில், உடற்பயிற்சி செய்தால் (180 வினாடிகளில் 30 முறை அமர்ந்து எழுந்திருக்கும் நபருக்கு) இலவச நடைமேடை டிக்கெட் பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
அ) குஜராத்
ஆ) கோவா
இ) டில்லி
ஈ) பஞ்சாப்
விடைகள்
1)அ 2)ஆ 3)ஆ 4)அ 5)ஆ 6)இ 7)அ 8)ஆ 9)இ 10)இ

