
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள, ஹுசைன் சாகர் ஏரிக் கரையோரம், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட, இந்தியாவிலேயே மிகவும் உயரமான அம்பேத்கர் சிலையின் உயரம் எவ்வளவு?அ. 150 அடிஆ. 130 அடிஇ. 125 அடிஈ. 140 அடி
2. மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக, தமிழகத்தின் எந்த மாவட்டக் கலெக்டரான ஆர்த்திக்கு, மத்திய அரசின் 'பிரதமர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது?அ. திருவள்ளூர் ஆ. காஞ்சிபுரம் இ. தஞ்சாவூர் ஈ. ஈரோடு
3. 'எஸ்.எஸ்.சி. எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குறிப்பிட்ட தேர்வுகளை, ஹிந்தி, ஆங்கிலம் தவிர, இனி தமிழ் உட்பட எத்தனை பிராந்திய மொழிகளில் எழுதலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது?அ. 13ஆ. 15இ. 18ஈ. 12
4. கடந்த 2022ஆம் ஆண்டில், இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நகரங்களில், எந்த நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனமான, 'வேர்ல்டுலைன் இந்தியா' தெரிவித்துள்ளது?அ. சென்னை ஆ. ஹைதராபாத் இ. பெங்களூரு ஈ. மும்பை
5. மத்திய கூட்டுறவு வங்கிகளில், கணவரால் கைவிடப்பட்ட, கணவரை இழந்த பெண்கள், சுயதொழில் செய்து முன்னேற வழங்கப்படும் கடன் தொகை, 25,000 ரூபாயில் இருந்து எவ்வளவு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது?அ. ரூ.30,000ஆ. ரூ.60,000இ. ரூ.1,00,000ஈ. ரூ.50,000
6. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்களின்படி, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில், 142.86 கோடி மக்கள் தொகையுடன், எது முதலிடத்தைப் பிடித்துள்ளது?அ. இந்தியாஆ. சீனாஇ. ரஷ்யாஈ. அமெரிக்கா
7. மலேசியாவில் சமீபத்தில் நடந்த, சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், எத்தனை தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்?அ. நான்குஆ. ஐந்துஇ. மூன்றுஈ. இரண்டு
விடை: 1. இ, 2. ஆ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. அ, 7. ஆ.

