
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. இந்திய இராணுவத்தின் எந்தப் படைப்பிரிவில் முதன்முறையாக, ஐந்து பெண் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்?
அ. கடற்படை
ஆ. போர்
இ. பாதுகாப்பு
ஈ. விமானம்
2. தெற்கு இரயில்வே அளவில், கடந்த நிதியாண்டில் ரூ.1,085 கோடி வருவாய் ஈட்டியது. அதில் அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில் எந்த இரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?
அ. சென்னை சென்ட்ரல்
ஆ. மதுரை சந்திப்பு
இ. சென்னை எழும்பூர்
ஈ. எர்ணாகுளம் சந்திப்பு
3. நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், ரூ.3,200 கோடி மதிப்பிலான சரக்குப் போக்குவரத்து முனையத்தை, எந்த நாட்டு அரசு அமைக்க உள்ளது?
அ. நேபாளம்
ஆ. பூட்டான்
இ. சீனா
ஈ. பாகிஸ்தான்
4. ஐரோப்பிய நாடான எங்கு, உலகின் முதல் ஹைட்ரஜன் இரயில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?
அ. ரஷ்யா
ஆ. பிரான்ஸ்
இ. ஸ்பெயின்
ஈ. ஜெர்மனி
5. இந்தியாவிலேயே முதல்முறையாக, எந்த மாநிலத்தில் அமைந்துள்ள, ஆஞ்சி எனும் ஆற்றின் மேலே, முழுக்க கேபிள்களால் மட்டுமே தாங்கக்கூடிய இரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது?
அ. பஞ்சாப்
ஆ. ஜம்மு - காஷ்மீர்
இ. நாகாலந்து
ஈ. ஜார்க்கண்ட்
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. ஈ, 5. ஆ.

