PUBLISHED ON : ஜூலை 31, 2023

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1.காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்ந்து, 'பிரதமர் பதவிக்கு நாங்கள் ஆசைப்படவில்லை' என, சமீபத்தில் பேசிய தேசியக் கட்சித் தலைவர் யார்?
அ. அமித் ஷா(பாரதிய ஜனதா)
ஆ. மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்)
இ. சீதாராம் யெச்சூரி (கம்யூனிஸ்ட்)
ஈ. மாயாவதி(பகுஜன் சமாஜ்)
2. தமிழகத்தில், எத்தனை புதிய வணிக வரி மாவட்டங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன?
அ. 13
ஆ. 15
இ. 12
ஈ. 10
3. மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சூரியசக்தி மின் நிறுவு திறனில், இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடத்தில் (14,311) உள்ளது?
அ. கேரளம்
ஆ. தமிழ்நாடு
இ. குஜராத்
ஈ. ராஜஸ்தான்
4. இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், இனி தமிழ் உள்ளிட்ட எத்தனை பிராந்திய மொழிகளில் பாடம் பயிற்றுவிக்க வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது?
அ. 20
ஆ. 25
இ. 21
ஈ. 22
5. 'செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுப்பதே, இப்போதுள்ள பெரிய சவால்' என, சமீபத்தில் பேசியவர்?
அ. சந்திரசூட் (தலைமை நீதிபதி - உச்ச நீதிமன்றம்)
ஆ. நரேந்திர மோடி (பிரதமர் - இந்தியா)
இ. திரெளபதி முர்மு (ஜனாதிபதி - இந்தியா)
ஈ. ஸ்டாலின் (முதல்வர் - தமிழகம்)
6. அமெரிக்கக் கடற்படைக்கு முதல்முறையாகப் பெண் தளபதியை நியமிக்கும் வகையில், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் யாரைப் பரிந்துரை செய்துள்ளார்?
அ. லவ்ரா ஜெ.ரிச்சர்ட்சன்
ஆ. லிசா பிரான்செட்டி
இ. மார்கரேட் ஆடம்ஸ்
ஈ. ஜேன் கேஸ்டர்
7. உலக அளவில் அதிக புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நாடுகளில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
அ. ஒன்று
ஆ. இரண்டு
இ. மூன்று
ஈ. நான்கு
8. 'யூத் கால்பந்தின் உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும், சர்வதேச யூத் கோதியா கோப்பைத் தொடரில், சாம்பியன் ஆன முதல் இந்திய அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள அணியின் பெயர்?
அ. அக்னாவா
ஆ. மினெர்வா
இ. அதெர்வா
ஈ. சதர்ன்வா
விடை: 1. ஆ, 2. அ, 3. ஈ, 4. ஈ, 5. அ, 6. ஆ, 7. இ, 8. ஆ.
