உள்ளடக்கத்திற்கு செல்ல

ஆதார் எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு: யு.ஜி.சி., அறிவிப்பு
ஆதார் எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு: யு.ஜி.சி., அறிவிப்பு
PUBLISHED ON : செப் 19, 2016

அ நிறம் | அளவு
சமீபத்தில் ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும், என மத்திய அரசு அறிவித்தது. இதனால், ஆதார் எண் இல்லாத பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., 'ஆதார் எண் இல்லை என, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது. ஆதார் எண் இல்லாதோர், முகவரி அடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என அறிவித்துள்ளது.
