உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
“அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, நான்கு பரிமாண முறையில் படங்களை விளக்கிக் காட்டும் மொபைல் போன் ஆப் மற்றும் காணொளிக் காட்சி குறுந்தகடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயலியை, 'TN SCHOOLS LIVE' என்ற பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இது தொடர்பான, காணொளிக் காட்சி குறுந்தகடுகள், 6000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன” என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறினார்.
