sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூலை 10, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 10, 1949 - சுனில் கவாஸ்கர் பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை முதலில் கடந்தவர், அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என, பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். பத்மபூஷண், அர்ஜுனா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஜூலை 11, 1989 - உலக மக்கள் தொகை நாள்

பெருகிவரும் மக்கள் தொகையால், உயிரினங்களுக்கு ஆபத்தும், மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. 2020ல், உலகிலேயே அதிக இளைஞர்கள் இருக்கிற நாடாக இந்தியா ஆகிவிடும். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்கிற நோக்கில், ஐ.நா.சபையால் முடிவு செய்யப்பட்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஜூலை 12, 1904 - பாப்லோ நெருடா பிறந்த நாள்

20ம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர். சிறு வயதிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். முதல் கவிதைத் தொகுப்பான 'புக்ஸ் ஆஃப் ட்விலைட்ஸ்' 19வது வயதில் வெளிவந்தது. இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 'பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்' என்ற இவரது கவிதை பிரபலமானது.

ஜூலை 12, 1997 - மலாலா யூசஃப்சாய் பிறந்த நாள்

பாகிஸ்தானில் பெண் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் குரல் கொடுத்தார். தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டு ஆபத்தான நிலையிலிருந்து உயிர் தப்பினார். 'உலகை மாற்ற ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா போதும்' என்றார். 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 2013 முதல் இவரது பிறந்த நாளை, ஐக்கிய நாடுகள் 'மலாலா தினம்' என்று கொண்டாடுகிறது.

ஜூலை 15, 1876 - மறைமலை அடிகள் பிறந்த நாள்

தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய தமிழ் அறிஞர். தமிழ்ப் பற்றால், 'வேதாச்சலம்' என்ற தனது பெயரை 'மறைமலை' என்று மாற்றிக்கொண்டார். இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என, பல பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ஜூலை 15, 1903 - கே. காமராஜர் பிறந்த நாள்

தமிழக முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். தமிழக அரசியலில், பொற்கால ஆட்சி நடத்தினார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவையும், இலவசக் கல்வியையும் நடைமுறைப்படுத்தினார். தன்னலமற்ற தொண்டிற்காக அவரின் மறைவிற்குப் பின்னர் 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு வழங்கியது






      Dinamalar
      Follow us