sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஆக 14, 2017

Google News

PUBLISHED ON : ஆக 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 15, 1947 - இந்திய சுதந்திர நாள்

இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே அந்நிய தேசத்தவரிடம் நாம் அடிமைகளாக இருந்தோம். அதை எதிர்த்துப் போராடி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடானது. சுதந்திரத்தையும், அதற்காக இன்னுயிர் தந்த தியாகிகளையும் நினைவுகூர இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 19, 1871 - ஆர்வில் ரைட் பிறந்தநாள்

அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். விமானத்தைக் கண்டறிந்த ரைட் சகோதரர்களில் மூத்தவர். முதன்முதலாக விமானத்தை இயக்கி 12 வினாடிகள் வானில் பறந்தார். அவர்கள் வடிவமைத்த அந்த விமானம், வாஷிங்டன் தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 19, 1918 - சங்கர்தயாள் சர்மா பிறந்தநாள்

இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர். 1992ல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். 8வது துணைக் குடியரசுத் தலைவராகவும், 1952ல் இருந்து 1956 வரை முந்தைய போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

ஆகஸ்ட் 19, 1839 - உலகப் புகைப்பட நாள்

லூயிஸ் டாகுரே என்பவர், டாகுரியோடைப் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்து, 'ஃப்ரீ டூ தி வேர்ல்ட்' என உலகம் முழுவதும் அறிவித்தது. புகைப்படக்கலையின் பெருமையை உணர இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 19, 2008 - உலக மனிதநேய நாள்

போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவார்கள். அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நினைவுகூர, ஐ.நா. சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 20, 1944 - ராஜீவ் காந்தி பிறந்த நாள்

இந்தியாவின் ஆறாவது பிரதமர். புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் (40 வயது) பிரதமரானார். இவரது பிறந்த நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us