PUBLISHED ON : நவ 20, 2017

நவம்பர் 20, 1954: சர்வதேச குழந்தைகள் நாள்
குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், குழந்தைகள் உரிமைச் சட்டத்தை ஐ.நா.சபை கொண்டுவந்தது. குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் அவர்களின் நலன்களைக் காப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 21, 1996: உலகத் தொலைக்காட்சி நாள்
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள்,
கலை, கலாசாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காக, ஐ.நா. சபையால் இந்த நாள் முக்கியனமானதாகக் கருதப்படுகிறது.
நவம்பர் 23, 1921: கவிஞர் சுரதா பிறந்த நாள்
கவியரங்குகளுக்கு புதுவடிவம் கொடுத்த 'உவமைக் கவிஞர்'. பாவேந்தரின் இயற்பெயர் 'சுப்புரத்தினதாசன்' என்பதைச் சுருக்கி 'சுரதா' என்று மாற்றிக்கொண்டார். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நவம்பர் 24, 1859: படிவளர்ச்சி நாள்
சார்லஸ் டார்வின், 'உயிரினங்களின் தோற்றம்' என்கிற நூலை 1859, நவம்பர் 24ல் வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்டதன் நினைவாக 'படிவளர்ச்சி நாள்' கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 26, 2015: அரசியல் சாசன நாள்
இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கவும், இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த நாள் தொடங்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 26, 2001: உலக உடல் பருமன் எதிர்ப்பு நாள்
உடல் பருமன் என்றால், அதிக அளவு கொழுப்பு நமது திசுக்களில் இருக்கிறது என்று பொருள். அதிகமாகக் கொழுப்பு சேர்வது உடல் நலனுக்கு ஆபத்தானது. உடல் பருமனால் ஏற்படும் தீமைகளை விளக்க, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
