sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஏப் 23, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 23, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 24, 1820 - ஜி. யு. போப் பிறந்த நாள்

தமிழுக்குச் சேவை செய்த கனடா நாட்டு மத போதகர். ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஏப்ரல் 24, 1973 - சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் வீரர். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என சாதனைகள் படைத்தவர். பத்மவிபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.

ஏப்ரல் 25, 1874 - மார்க்கோனி பிறந்த நாள்

வானொலியின் தந்தை. கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்கி, மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பினார். இதற்காக இயற்பியலில் நோபல் பரிசு கிடைத்தது.

ஏப்ரல் 25, 1912 - மு.வரதராசனார் பிறந்த நாள்

தமிழறிஞர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'அகல் விளக்கு' என்ற நாவலுக்கு 1963இல் சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது.

ஏப்ரல் 27, 1791 - சாமுவேல் மோர்ஸ் பிறந்த நாள்

தந்தி அனுப்புவதற்காக மோர்ஸ் கோட் (Morse code) என்கிற சங்கேத மொழியை உருவாக்கிய அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தார்.

ஏப்ரல் 29, 1891 - பாரதிதாசன் பிறந்த நாள்

தமிழ்க் கவிஞர். பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதைத் தொகுப்பு, கதைகள் எழுதி இருக்கிறார். தமிழக அரசு இவரது படைப்புகளை 1990இல் நாட்டுடைமை ஆக்கியது.






      Dinamalar
      Follow us