தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மே 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 7, 1861 - ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்

வங்காள மொழிக் கவிஞர். இந்தியா, வங்கதேசத்தின் தேசியகீதங்கள் இவரால் எழுதப்பட்டவை. 'கீதாஞ்சலி' கவிதை தொகுப்பிற்காக 1913இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

மே 8, 1828 - ஹென்றி டியூனான்ட் பிறந்த நாள்

போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கினார். இவரது பிறந்த நாள் உலக செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1901இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்றார்.

மே 9, 1866 - கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர். மகாத்மா காந்தியின் அரசியல் குரு. நாடு சுதந்திரம் பெறுவதைவிட அதன் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை காட்டினார். குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார்.

மே 11, 1998 - தேசிய தொழில் நுட்ப நாள் - இந்தியா

பொக்ரான் அணுகுண்டு சோதனையை நினைவுகூர இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மே 12, 1820 - ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்

இத்தாலியில் பிறந்தார். செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை புரிந்த இவரைக் கௌரவிக்க, சர்வதேச செவிலியர் நாள் இதே நாளில் கொண்டாடப்படுகிறது.

மே 13, 1918 - பாலசரஸ்வதி பிறந்த நாள்

பரதநாட்டியக் கலைஞர். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரதக் கலையைப் பரப்பினார். 'உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்' என்று போற்றப்பட்டார். 'பத்ம விபூஷன்' விருது பெற்றிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us