தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 12 2002 - குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு நாள்

குழந்தைகள், ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை ஒழிக்கும் நோக்கில் ஐ.நா. சபையால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜூன் 14 1444 - நீலகண்ட சோமயாஜி பிறந்த நாள்

கேரளாவைச் சேர்ந்த வானியலாளர், கணிதவியலாளர். 'தந்திர சங்கிரகா' உள்ளிட்ட பல வானியல் நூல்களை எழுதியுள்ளார். அதில் வானியலின் அவசியத்தையும் கணக்கிடல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 14 1928 - சே குவேரா பிறந்த நாள்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த சோசலிசப் புரட்சியாளர். கியூபா உட்பட பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி. ' உலகில் நடக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே' என்றார்.

ஜூன் 14 2004 - இரத்த தான நாள்

கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் இரத்தத்தில் உள்ள வகைகளைக் கண்டுபிடித்தார். இவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, உலக சுகாதார நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடுகிறது.

ஜூன் 15 2007 - உலக காற்று தினம்

உயிரினங்கள் உயிர் வாழக் காற்று அவசியம். காற்றின் தேவையை அறிந்து கொள்ளவும், அது மாசடைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 17 1973 - லியாண்டர் பயஸ் பிறந்த நாள்

இந்திய டென்னிஸ் வீரர். இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் வென்றார். 1996 ஒலிம்பிக்கில் வெண்கலமும், அர்ஜுனா போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us