தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஆக 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 29, 2009 - சர்வதேச அணு ஆயுதச் சோதனை எதிர்ப்பு நாள்

உலகம் முழுக்க நடத்தப்படும் அணு ஆயுதச் சோதனைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுகள் பற்றியும், பரவலைத் தடுக்கவும், ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 29, 1905 - தயான் சந்த் பிறந்த நாள்

ஹாக்கி வீரர். 1928, 1932, 1936 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லக் காரணமாக இருந்தார். 1956இல் பத்மபூஷன் விருது பெற்றார். இவரின் பிறந்த நாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 29, 1958 - மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாள்

பாப் இசை மன்னன். நடனத்துடனான பாடல்களை ஆல்பங்களாக வெளியிட்டு, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றார். கிராமி விருதுகள், கின்னஸ் உலக சாதனைகள் உட்பட பல இசை விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

ஆகஸ்ட் 30, 2001 - சிறு தொழிற்சாலைகள் நாள்

குறைந்த முதலீட்டில், அதிக வேலை வாய்ப்புகள் தரும் சிறு தொழில் நிறுவனங்களே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம். அவற்றை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 30, 1981 - அனைத்துலக காணாமற்போனோர் நாள்

இரகசியமான கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் போராடி வருகின்றன. கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

செப்டம்பர் 2, 1998 - உலக தேங்காய் நாள்

உலகம் முழுக்கப் பரவலாக விளையும் தென்னையின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us