தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : நவ 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 5, 1988 - விராட் கோஹ்லி பிறந்த நாள்

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன். ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கிறார்.

நவம்பர் 7, 1867 - மேரி க்யூரி பிறந்த நாள்

புற்றுநோய் சிகிச்சைக்கான ரேடியத்தைக் கண்டறிந்து சாதனை படைத்தார். இயற்பியல், வேதியியல் துறைகளில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்று இருக்கிறார்.

நவம்பர் 7, 1888 - சர் சி.வி.ராமன் பிறந்த நாள்

இந்திய அறிவியல் மேதை. கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். 'ராமன் விளைவு'க்காக, 1930இல் நோபல் பரிசு, 1954இல் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

நவம்பர் 8, 1680 - வீரமா முனிவர் பிறந்த நாள்

இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ் கற்று, கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பெயரை, வீரமாமுனிவர் என மாற்றினார். 9 மொழிகளில் புலமையுடன் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார்.

நவம்பர் 10, 2001 - அமைதி, வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்

சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து அன்றாட வாழ்வில் மக்கள் விவாதிக்க வேண்டும். இதற்காக யுனெஸ்கோ அமைப்பால் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.

நவம்பர் 11, 1898 - கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்

தமிழ்மொழிக்காகப் பாடுபட்ட இவரது 23 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் இவரின் பெயரால் விருது வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us