தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 6, 1475 - மைக்கேலாஞ்சலோ பிறந்த நாள்

இத்தாலி நாட்டு ஓவியர். சிற்பி, கவிஞர், கட்டடக் கலைஞர் என, பன்முகத் திறமை கொண்டவர். ரோம் சிஸ்டைன் ஆலய உட்கூரைச் சுவரில் இவர் வரைந்த கடைசித் தீர்ப்பு ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை.

மார்ச் 6, 1937 - வாலன்டினா டெரெஷ்கோவா பிறந்த நாள்

விண்வெளியில் பறந்த முதல் பெண் என்ற பெருமை பெற்ற ரஷ்யர். மூன்று நாட்களில் 48 முறை பூமியைச் சுற்றி வந்தார். சோவியத் யூனியன் அரசு, வாலன்டினாவுக்கு, 'ஆர்டர் ஆஃப் லெனின்' என்கிற மிக உயரிய விருதை வழங்கியது.

மார்ச் 7, 1765 - ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் பிறந்த நாள்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படத்துறையின் முன்னோடி. நிரந்தரமாகப் பதியும் கேமராவைக் கண்டுபிடித்தார். 'முதன்முதலாகப் புகைப்படங்கள் எடுத்த நபர்' என்ற பெருமைக்குரியவர்.

மார்ச் 8, 1946 - அனைத்துலக மகளிர் நாள்

பெண்களுக்கு சம உரிமையுடன் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். பெண்களைப் போற்றும் விதத்தில் ஐ.நா.சபையால் தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 9, 1454 - அமெரிக்கோ வெஸ்புகி பிறந்த நாள்

இத்தாலிய கடற் பயணி. கடற்பயணத்தின்போது, பல புதிய இடங்களைக் கண்டுபிடித்தார். அவற்றுள் அமெரிக்காவின் சில நகரங்களும் அடங்கும். ஆகவே, அமெரிக்காவுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்ச் 10, 1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்

தமிழர், தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். 'தமிழ்த் தேசியத் தந்தை' என போற்றப்படுகிறார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று, 20க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us