PUBLISHED ON : ஜூலை 29, 2019

ஜூலை 29, 1904 - ஜே.ஆர்.டி.டாடா பிறந்த நாள்
இந்திய தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதுபெற்ற முதல் தொழிலதிபர்! இந்தியாவின் முதல் விமானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்!
ஜூலை 29, 2010 - சர்வதேச புலிகள் காப்பக நாள்
உலகெங்கும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் புலிகளுக்காக 50 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகள் இனத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜூலை 30, 1863 - ஹென்றி ஃபோர்டு பிறந்த நாள்
அமெரிக்கப் போக்குவரத்துத் துறையில் குறைந்த செலவில் கார் உற்பத்தி செய்து புரட்சியை ஏற்படுத்தினார். உலகின் மிகப் பெரிய தொழிலதிபர் ஆனபிறகு, அறக்கட்டளை உருவாக்கி, நல்ல காரியங்களுக்கு உதவினார்.
ஜூலை 31, 1966 - ஜே.கே.ரௌலிங் பிறந்த நாள்
இங்கிலாந்து எழுத்தாளர். 'ஹாரிபாட்டர்' எனும் புதினம் மூலம் உலகப்புகழ் பெற்றார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.
ஆகஸ்ட் 2, 1876 - பிங்கலி வெங்கையா பிறந்த நாள்
இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர். தென்னாப்பிரிக்க போரில் இந்திய -பிரிட்டன் படையில் பணியாற்றினார். காந்திஜியின் அறிவுறுத்தலால், தேசியக் கொடியை உருவாக்கினார்.
ஆகஸ்ட் 4, 1961 - பராக் ஒபாமா பிறந்த நாள்
ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபர். 2009 முதல் 2017 வரை பதவியில் இருந்தார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதல் அதிபர் இவரே! 2009இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
