தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : நவ 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 11, 1898 - கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்

தமிழ்மொழியின் உயர்விற்காகப் பாடுபட்டவர். இவர் எழுதியுள்ள 23 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி இயக்ககம் சார்பில், தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவர் பெயரில் விருது வழங்கப்படுகிறது.

நவம்பர் 12, 1896 - சலீம் அலி பிறந்த நாள்

பறவைகள் ஆராய்ச்சியாளர். தேசிய அளவில் பறவைகள் சரணாலயம் அமைப்பதில் இவரது தொண்டு மகத்தானது. 'பறவைகள் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று புகழப்பட்டார்.

நவம்பர் 14, 1889 - ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். 1947 முதல் தன் வாழ்நாளின் கடைசியான 1964 வரை பிரதமராகப் பணியாற்றினார். இவர் பிறந்த நாள் தேசியக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 15, 1986 - சானியா மிர்சா பிறந்த நாள்

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர். 2004இல் இவருக்கு, 'அர்ஜுனா விருது' வழங்கப்பட்டது. இவரது சுயசரிதை நூல் 'ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்' (Ace against Odds).

நவம்பர் 15, 1942 - டாக்டர் செ.நெ. தெய்வநாயகம் பிறந்த நாள்

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தினார். புகையிலை எதிர்ப்பு, மது ஒழிப்பு குறித்து குரல் கொடுத்தார்.

நவம்பர் 17, 1909 - சி.இலக்குவனார் பிறந்த நாள்

இலக்கிய ஆய்வாளர். தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்க் காப்புக் கழகத்தைத் தொடங்கினார். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழகம் முழுக்க சொற்பொழிவாற்றித் தமிழை வளர்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us