தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர்: என்னாச்சுடா முன்னா? கையையும் காலையும் ஒருபக்கமா வெட்டி வெட்டி இழுக்கிற?!

முன்னா: ரோபோ டான்ஸ் ப்ராக்டிஸ் பண்றேன். டிஸ்டர்ப் பண்ணாம போடா.

ச: ரோபோ டான்ஸா? இதுவா? ஹி... ஹி...

மு: மெட்டல் பாடி இருந்தாதான் ரோபோ டான்ஸ் ஆடணுமா என்ன? பார்த்துக்கிட்டே இரு இன்னும் ரெண்டு நாள்ல நான் ஆடிக் காட்டுறேன். இல்லன்னா என் பேர மாத்திக்குறேன்.

ச: ஒரு ஐடியா சொல்றேன். டெர்மினேட்டர், ஐ ரோபோ, எந்திரன் மாதிரி ரோபோக்கள் நடிச்ச படங்களைப் பார்த்து, நீ ஏன் ஸ்டெப்ஸ் கத்துக்கக் கூடாது?

மு: ஐடியா கொடுக்குறேன்னு சொல்லி என்னய வச்சு வித்தை காட்ட ப்ளான் பண்றயா?

ச: நீ வித்தை காட்ட வேணாம். வீட்டைச் சுத்தம் செஞ்சா போதும்.

மு: என்னடா சொல்ற? உன் பேச்சு இன்னைக்கு சுத்தமா சரியில்ல.

ச: டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அக்வாபாட் 5.0 என்கிற ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் வீடு, அலுவலகங்களை ஆளில்லாமலே சுத்தம் செய்கிறது.

மு: அப்படியா! ரோபோன்னா கெத்தா இருக்கும் நினைச்சேன். கடைசில சுத்தம் பண்ண வச்சிட்டாங்களே?!

ச: அப்படி நினைக்காத. ஹியூமனாய்டு ரோபோ ஒண்ணு செவ்வாய் கிரகம் போக ரெடியா இருக்குது. நாசா அனுப்புற அந்த ரோபோ பெயர் 'வால்கரி'.

மு: நானும் ஹியூமனாய்டு ரோபோ மாதிரிதான் ப்ராக்டிஸ் பண்றேன். எனக்கும் பவர் வரப்போகுது. மின்னல் மாதிரி ஓடுவேன் பாரு!

ச: ஏற்கெனவே அமெரிக்க ரோபோ ஒண்ணு 'மின்னல் வீரன்' உசேன் போல்ட்டைவிட

வேகமா ஓடி சாதனை படைச்சிருக்கு!

மு: இந்த அமெரிக்கா விஞ்ஞானிகளுக்கு வேற வேலையே இல்லையா? நான் நினைக்குறத எல்லாமே காப்பி அடிச்சு பண்ணிடுறாங்க...

ச: உன்னோட ஐடியாவ காப்பி அடிச்சிட்டாங்களா? ரொம்ப ஓவராப் போற. முதல்ல உனக்கு காபி போடத் தெரியுமா?

மு: கருப்பட்டி காபி, சுக்கு காபி, ஐரிஷ் காபி, ஃபில்டர் காபி, டர்கிஷ் காபி, எஸ்ப்ரஸ்ஸோ, கேப்புசீனோ இதுல உனக்கு என்ன காபி வேணும்?!

ச: என்னடா! இவ்வளவு காபி வகைகள் இருக்கா? 'காபி வித் முன்னா' அப்படின்னு நிகழ்ச்சி நடத்தலாம்போல.

மு: டேய் ஷார்ப்பு. கிரீன் டீ மாதிரி கிரீன் காபி போட்டுத் தரவா..?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us