உள்ளடக்கத்திற்கு செல்ல

113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்!
113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்!
PUBLISHED ON : ஜூலை 23, 2018

அ நிறம் | அளவு
கடந்த 1905இல் நடந்த போரில், ரஷ்யாவின் திம்திரி டான்ஸ்கோய் (Dmitrii Donskoi) போர்க் கப்பலை, ஜப்பான் தாக்கி அழித்தது. கடலில் மூழ்கிய அக்கப்பல் 113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலில், 200 டன்கள் தங்கம் இருந்ததாகக் கூறப்பட்டது. இதுபற்றி ரஷ்யா ஏதும் சொல்லவில்லை. தென் கொரிய கடற்பகுதியில் மூழ்கிய அக் கப்பலைக் கண்டுபிடிக்க அவ்வப்போது முயற்சிகள் நடக்கும்; முடியாமல் கைவிடப்படும். தென் கொரிய நிறுவனமான ஷைனி குழுமம் இதைத் தேடும் பணியில் இறங்கியது. ஒரு மாதத்திலேயே அக் கப்பலைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. கப்பலில் புதையல் இருப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 12.4 லட்சம் கோடி ரூபாய்.
