PUBLISHED ON : மார் 20, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசியாவில், சிறந்த நகரங்களின் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மெர்சர் (Mercer) என்ற நிறுவனம், உட்கட்டமைப்பு, சுகாதாராம், கல்வி, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களில் சிறந்து விளங்கும் நகரங்களை வரிசைப்படுத்தியது. 231 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா சிறந்த நகரமாக தேர்வாகியுள்ளது. இதற்கடுத்த இடங்களில், சுவிட்சர்லாந்தின் ஜூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியைச் சேர்ந்த முனிச் ஆகிய நகரங்கள் வந்துள்ளன. இதில் 25வது இடத்தைப் பிடித்துள்ள சிங்கப்பூர், ஆசியாவின் சிறந்த நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இப்பட்டியலில், இந்தியாவின் ஒருநகரம் கூட இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

