sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தொழில்நுட்பம் மூலம் பெண்கள் கல்விக்கு உதவும் சகோதரிகள்

/

தொழில்நுட்பம் மூலம் பெண்கள் கல்விக்கு உதவும் சகோதரிகள்

தொழில்நுட்பம் மூலம் பெண்கள் கல்விக்கு உதவும் சகோதரிகள்

தொழில்நுட்பம் மூலம் பெண்கள் கல்விக்கு உதவும் சகோதரிகள்


PUBLISHED ON : ஜூலை 17, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் பெண் குழந்தைகள் எழுத்தறிவு கணிசமாக உயர்ந்தாலும், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் பெண்களுடைய பங்கேற்பு மிகவும் குறைவுதான். குறிப்பாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் 37% மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். பெரிய பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் 15% பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். அறிவியலில் பி.எச்டி., செய்யும் பெண்களின் எண்ணிக்கை 10% தான்.

அதிதி, தீப்தி இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். தீப்தி, நியூரோ சயின்ஸ் ஆராய்ச்சியாளர். கூடவே, சட்டம் மற்றும் பொதுக் கொள்கைகளை வகுக்கும் துறைகளில் படித்து, சென்னை ஐ.ஐ.டி.யில் சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து, 'ரோபோடிக்ஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். படிக்க வசதி இல்லாத பெண் குழந்தைகளுக்கு, இலவசமாக, ரோபோடிக்ஸ் மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.

தமிழகத்தில, பல கிராமங்களில் கைவிடப்பட்ட குழந்தைகள் தங்கியிருக்கும் விடுதிகளில், இவர்களுடைய நிறுவனம் ரோபோடிக்ஸ் மூலம், பல்வேறு திறன்களை கற்றுக் கொடுக்கிறது. அந்நிறுவனத்தின் செயல் தலைவர் அதிதியோடு பேசியதிலிருந்து:

ரோபோடிக்ஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ் எப்படி உருவானது?

''பெண் குழந்தைகளுக்கு நிறைய திறன்கள் இருக்கு; ஆனா அதை வெளிப்படுத்தவோ, ஊக்கப்படுத்தவோ அவங்களுக்கு யாருமில்லை. எங்களுக்கு எங்கப்பா இருந்தாரு. எங்களோட ஒவ்வொரு யோசனைக்குப் பின்னாலும், எங்க அப்பா கொடுத்த ஊக்கம் காரணமா இருந்தது. இன்னும் சில ஆண்டுகளில் ரோபோக்கள்தான் எல்லாமே. இப்பவே நம்மள சுத்தி நிறைய விஷயங்கள் ரோபோக்கள் மூலமா இயக்கப்படுது. நாங்க படிச்ச காலத்துல கணினி இருந்தது. இப்ப ரோபோக்களின் காலம். அதுதான் அடுத்த தலைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வியைத் தரமான முறையில், முறையாகக் கொடுக்க வேண்டும் என்பதால், இதை உருவாக்கினோம்.''

உங்களுடைய இந்த முயற்சியை தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்ததா?

''பெற்றோர்களால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் தங்கும் காப்பகங்களில், ரோபோடிக்ஸ் மூலம் பாடங்கள் எடுத்தோம். வசதியில்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தோம். அதன்பின், மற்ற பள்ளிகளையும் அணுகி, சோதனை முறையில் வகுப்புகள் எடுத்தோம். மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறோம்.''

உங்களுடைய கனவை அடைந்த திருப்தி இருக்கிறதா?

''எங்க வீட்ல மூணு பொண்ணுங்க. நாங்க எங்களோட மத்த நண்பர்களுக்கு, படிக்க வசதியில்லாதவங்களுக்குக் கத்துக்கொடுப்போம். மற்றவர்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இன்னும் நிறைய தூரம் போக வேண்டியது இருக்கு.''

ரோபோடிக்ஸ் கல்வியை இன்றைய குழந்தைகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

''ரோபோடிக்ஸ் கல்வி, குழந்தைகளுக்கு புதிய அணுகுமுறையாக இருப்பதால், அதில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் உலகம் வேறு. பள்ளி, காப்பகம் இரண்டும்தான் அவர்களுடைய உலகம். ரோபோடிக்ஸ் மூலம், புதிதாகச் செய்ய வேண்டும் என, அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஒரு குழந்தை, பள்ளிப் பேருந்துகளுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க, சென்சார் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறாள். இன்னொரு குழந்தை, குப்பைகளை அகற்றுவதற்கு, ரோபோடிக்ஸ் மூலம் புதிய சென்சார் வண்டி தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறாள்.''

பெண் குழந்தைகள் அறிவியலில் பங்களிப்பது அதிகரிக்குமா?

''பெண் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுப்பதோடு, பெற்றோர்கள் நின்றுவிடக் கூடாது. அவர்களுடைய கற்பனைத் திறன் வளர்வதற்கு உதவி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நிறையப் பெண் குழந்தைகள், அறிவியலில் சாதனை படைப்பார்கள்.''






      Dinamalar
      Follow us