PUBLISHED ON : ஜூலை 07, 2025
ரெண்டரிங் இன்ஜின் (Rendering Engine) என்பது ஒரு வலை உலாவியை இயக்கும் (Web Browser) முக்கிய மென்பொருள் கூறு ஆகும். இது HTML, CSS, JavaScript மற்றும் பிற வலை உள்ளடக்கங்களைப் பகுப்பாய்வு செய்து, அவற்றைப் பயனரின் திரையில் காட்சிப்படுத்துவதற்கு (render) பயன்படுகிறது. அதாவது, ஒரு வலைப்பக்கத்தின் குறியீடுகளை (code) எடுத்து, அதை நாம் பார்க்கும் படங்கள், உரைகள், பொத்தான்கள் மற்றும் அமைப்பாக (visual layout) மாற்றுகிறது. இது, உலாவியின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது இணைய உள்ளடக்கத்தைச் சரியாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வோர் உலாவியும் ஒவ்வொரு ரெண்டரிங் இன்ஜினைக் கொண்டு இயங்குகிறது. கீழே சில உலாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உலாவிகளில் பயன்படும் ரெண்டரிங் இன்ஜினைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
விடைகள்:
1. பயர்பாக்ஸ்: ஜெக்கோ (Gecko)
2. சஃபாரி: வெப்கிட் (Web Kit)
3. கூகுள் குரோம்
4. ஓபரா பிலின்க் (Blink)
5. மைக்ரோசாப்ட் எட்ஜ்