PUBLISHED ON : ஜூலை 21, 2025

குரல் உதவியாளர்கள் (Voice Assistants) என்பது மனிதர்களின் குரல் கட்டளைகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் அல்லது பணிகளைச் செய்யும் மென்பொருள் அமைப்பாகும். இவை ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், கணினிகள், பிற சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing -NLP), இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியவற்றைப் பயன்படுத்தி மனித உரையாடலைப் புரிந்து கொள்கின்றன.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியின் நிறுவனமும் தனித்தனி குரல் உதவியாளர்களைக் கொண்டுள்ளது. கீழே சில குரல் உதவியாளர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்த நிறுவனத்தைச் சார்ந்தவை எனக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. சிரி(Siri)
2. அலெக்ஸா(Alexa)
3. பிக்ஸ்பி(Bixby)
4. கோர்டானா(Cortana)
5. செலியா(Celia)
6. சியாவோடு(Xiaodu)
விடைகள்:
1. ஆப்பிள் (APPLE)
2. அமேசான் (AMAZON)
3. சாம்சங் (SAMSUNG)
4. மைக்ரோசாஃப்ட் (MICROSOFT)
5. ஹூவாவே (Huawei)
6. பைடு (Baidu)

