PUBLISHED ON : பிப் 13, 2017
ஒஹையோ பல்கலைக்கழகத்தில் (Ohio State University) நடந்த சமீபத்திய ஆய்வொன்றில் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் தேவையான அளவு தூங்குவதில்லை என்றும், அதன் விளைவாக உடல் மற்றும் மனநல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்ட டாக்டர். அனெசா தாஸ் (Annesa Das) தூக்கம் குறைந்தால் கற்றுக் கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விடிய விடிய கண்விழித்துப் படிப்பது, தேர்வில் எதிர்மறையான பயனைக் கொடுக்கவும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி. கண்விழித்துப் படிப்பதற்காக மாத்திரைகள் உபயோகிப்பது அல்லது காபி, டீ போன்றவற்றை அருந்துவது ஆகியவையும் சரியான வழிமுறைகள் இல்லை என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகின்றனர்

