உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 14, 2018

அ நிறம் | அளவு
ரூபிக் கனசதுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களில் இருக்கும். கலைந்து கிடக்கும் வண்ணங்களை ஒரே பக்கமாக கொண்டு வந்து நேர் செய்ய வேண்டும். பொதுவாக, இந்த ரூபிக் புதிரைத் தீர்க்க பல மணி நேரங்கள் ஆகும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த் ஃபெலிக்ஸ் ஜெம்டெக்ஸ் என்பவர், வெறும் 4.22 வினாடிகளில் ரூபிக் கனசதுரத்தின் எல்லாப் பக்கங்களையும் நேர்செய்து அசத்தியுள்ளார். 22 வயதான இந்த இளைஞரின், உலக கின்னஸ் சாதனை பல்வேறு தரப்பினரையும் வியப்படையச் செய்துள்ளது. இதற்கு முன்பு, தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சுயேங்பியோம் சோ என்பவர், 4.59 வினாடிகளில் ரூபிக் புதிரைத் தீர்த்து சாதனை செய்திருந்தார். அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
