தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தாய்க்காக இயந்திரம் கண்டுபிடித்த மகன்

தாய்க்காக இயந்திரம் கண்டுபிடித்த மகன்

தாய்க்காக இயந்திரம் கண்டுபிடித்த மகன்


PUBLISHED ON : மார் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்ன சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன், மரிபள்ளி அபிஷேக். இவரது தாய் ராஜவ்வா, இந்திரா கிராந்தி பதம் (Indira Kranthi Patham - IKP) நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்கிறார். அங்கே அவர், நெல்லை மூட்டைகளில் அடைக்கப்படும் சிரமத்தைக் கண்டு, அபிஷேக் மனம் நொந்தார். இச்சிரமத்தைப் போக்க, தனது அறிவியல் அறிவை நாடினார் அபிஷேக்.

தனது பள்ளி ஆசிரியர் உதவியுடன் சக்கரங்கள், சில இரும்புக் குழாய்கள், எடைக்கருவி மற்றும் ஒரு தையல் இயந்திரத்தை இணைத்து நெல்லை மூட்டையில் அடைக்கும் ஒரு கருவியை உருவாக்கினார் அபிஷேக். கடந்த மாதம் டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் அபிஷேக்கின் கண்டுபிடிப்பு, 3ஆம் பரிசைப் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us