தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒலியும் ஒளியும்!

ஒலியும் ஒளியும்!

ஒலியும் ஒளியும்!


PUBLISHED ON : ஜூலை 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த வேறுபாடும் இன்றி எல்லாரும் ரசிக்கும் ஒரே அதிசயம் இசை! கருவில் இருக்கும் குழந்தைகூட இசையை ரசிக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இத்தனை அதிசயங்களையும் கேட்டு மகிழ ஆரம்ப காலத்தில் பயன்பட்ட இசைக் கருவி கிராமபோன் (Gramophone)! டிஜிட்டல் வளர்ச்சியில் ரிக்கார்டு பிளேயர் என்றும் கேசட் என்றும் பரிணாம மாற்றம் நிகழ்ந்தது. அதன்பிறகு இசையை ஆட்சி செய்த DVD, CD கூட மொபைல் போன் வந்த பிறகு பயன்பாட்டில் குறைந்துவிட்டது.

இப்போது இசையைப் பார்க்கவோ கேட்கவோ, எம்பி3 (MP3), டேட் (DAT), விஓபி (VOB), எம்பி4 (MP4), 3ஜிபி (3GP), ஏவிஐ (AVI), எம்பெக்-1 (MPEG-1), எம்பெக்-2 (MPEG-2), 3ஜிபி (3gp), எம்கேவி (MKV) எனப் பல விதமான ஒலி, ஒளி கோப்புகளை (Audio, Video Files) பயன்படுத்திவருகிறோம்.

கணினி, டி.வி.டி. பிளேயர், மொபைல் போன் ஆகியவற்றில் இசை நிகழ்ச்சிகளை ரசிக்க இத்தனை விதமான வடிவமைப்புள்ள கோப்புகள் தேவையா என்று யோசிக்கலாம். ஆனால், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. AVIயை விட தரம் குறைவானது MPEG-2. டி.வி.டி.யில் பயன்படுத்தப்படுகிறது. MPEG-1 என்பது வி.சி.டி. (Video Compact Disc) தரமுள்ளது. இதே தரத்தில் குறைந்த கொள்ளளவில் அமைந்தது MPEG-4 மற்றும் டிவ்எக்ஸ் (DivX). மொபைல் போன்களில் 3gp பயன்படுகிறது. அதனுடன் MPEG-4, MKV, தரம் குறைக்கப்பட்ட AVI, MPEG-2, MPEG-1 போன்ற வகையிலான கோப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

தினமும் கேட்டு, பார்த்து ரசிக்கிற இசை, எத்தனை வடிவத்தில் நம்மைச் சுற்றி மிதந்துகொண்டிருக்கிறது. அறிவியல் யுகத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் வரப்போகிறதோ! காத்திருந்து பார்க்கலாம்; இல்லை இல்லை காத்திருந்து கேட்கலாம்!

கிராமபோன் என்கிற இசைத்தட்டுப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us