
* என்னோட வயது 460 கோடி ஆண்டுகள். எனக்குள் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டதால், இன்னும் 500 கோடி ஆண்டுகள் மட்டுமே இதேபோல எரிந்து கொண்டிருப்பேன்.
* என்னில் இருந்து கிளம்பும் ஒளி, பூமியை சென்றுசேர 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகும். நான் தருகிற ஒளியில் இருந்தே பூமிக்கான அனைத்து சக்திகளும் கிடைக்கின்றன.
* பூமியைவிட நான் 10 லட்சம் மடங்கு பெரியவன். பூமியைப் போல 110 மடங்கு அதிக விட்டத்தைக் கொண்டிருக்கிறேன். எனக்குள் ஒரு மில்லியன் பூமிகளை அடக்கலாம்.
* பூமியில் இருந்து ஒரு விமானத்தில் மணிக்கு 885 கி.மீ. வேகத்தில் பயணித்தால், என்னை அடைய 19 ஆண்டுகள் ஆகும்.
* எனது மேற்புற சராசரி வெப்பநிலை 5,500 டிகிரி செல்சியஸ். மையப் பகுதி வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ். 30 நாட்களில் நான் பயன்படுத்திய எரிசக்தியின் அளவையே, இதுவரை மனித இனம் பயன்படுத்தியுள்ளது.

