தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ்

தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ்

தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ்


PUBLISHED ON : ஜூலை 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்சன் மண்டேலா பிறந்த தினம் ஜூலை 18

18.07.1918 - 05.12.2013


குழந்தைகள் தினம், பெண்கள் தினம் கொண்டாடுவது போல தனிமனிதர் ஒருவரின் பிறந்த நாளையும் ஐ.நா. அவரது பெயரிலேயே கொண்டாடுகிறது. அந்தப் பெருமைக்கு உரியவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela).

மனித உரிமைகள் மேம்பட, ஆண், பெண் சம உரிமை ஏற்பட, பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரப் பாடுபட்டவர் மண்டேலா. அவர் பிறந்த ஜூலை 18ஆம் நாளைத்தான் நெல்சன் மண்டேலா தினமாகக் கொண்டாடுகிறது ஐ.நா.

மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அந்நாட்டில் கறுப்பு இனத்தவர் அதிகம். இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டது. சொந்த நாட்டிலேயே ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பயணம் செய்ய அனுமதி பெற்றாக வேண்டும். நிலமும் சொந்தமாக இருக்கக் கூடாது. இப்படிப் பல கட்டுப்பாடுகள்.

இதை எல்லாம் பார்த்த மண்டேலா வெள்ளையர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் தலைவரானார். அவரது போராட்டம் தொடர, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உலக நாடுகள் அவரின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுக்க, 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1990ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பிறகு 1994ல் தென் ஆப்பிரிக்காவின் அதிபரானார். இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவில் பரவலாக வசிக்கின்றனர். இதனால், தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளைப் பள்ளிகளில் கற்பிக்க வழி செய்தார் மண்டேலா.

நெல்சன் மண்டேலாவிற்கு இந்திய அரசின் பாரத ரத்னா (Bharat Ratna) விருது 1990ல் வழங்கப்பட்டது. உலக அமைதிக்கான நோபல் பரிசும் (Nobel Prize) 1993ல் கொடுக்கப்பட்டது.

உலகின் மதிப்பு மிக்கத் தலைவர்களில் மண்டேலாவும் ஒருவர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us