PUBLISHED ON : பிப் 26, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஹெலி டாக்சிகளை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த ஹெலி டாக்ஸிகள் (ஹெலிகாப்டர்கள்), அடுத்த வாரம் முதல் செயற்பாட்டுக்கு வருகின்றன.
முதல் கட்டமாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டிக்கும், ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளன. மற்ற வழிகளில் பயணிப்பதைவிட இதில் சுமார் 2 மணி நேரம் வரை பயணநேரம் குறையும். பயணக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ. 4,130 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 15 கிலோ எடை வரை பொருட்களை எடுத்துச் செல்லலாம். நகரில் மேலும் 90 புதிய ஹெலிபேடுகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இனி விமான நிலையம் செல்லும் பெங்களூருவாசிகள் பறந்து வந்து இறங்கலாம்.