PUBLISHED ON : ஜூன் 13, 2016

உலகில் உள்ள குட்டி விலங்கு எது? என்று கேட்டால் எதுவெல்லாம் ஞாபகத்தில் வரும் நமக்கு? முயல், ஆமை, சுண்டெலி, அணில்... இப்படி ஏதாவது ஒன்று நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் நம் நினைவுக்கு வராத ஓர் உயிரி இருக்கு. அது நீர் வாழ் உயிரினமான கோப்பாட் (Copepod) . கோப் பாட் 1 அல்லது 2 செ.மீ. அளவு நீளம் மட்டுமே வளரக் கூடியது. இந்தக் குட்டியூண்டு உடலை வைத்துக்கொண்டு இது செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதது. ஒரு நொடியில் அரை மீட்டர் அளவுக்கு தாண்டக் கூடியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நீளம் மட்டும் அல்ல, பலம் வாய்ந்ததும் கூட. எந்த அளவு தெரியுமா? உலகில் உள்ள எல்லா விலங்குகளையும் இந்தக் 'கோப்பாட்' அளவுக்கு மாற்றினால், அப்போது அதிக வலுவுள்ள உயிரியாக இதுதான் இருக்குமாம்.
இருப்பதோ குட்டியூண்டு உருவம். ஆனால் இது சாப்பிடும் வேகத்தை நினைத்தால் அம்மாடியோவ் என்று மலைத்துப் போய் விடுவோம். அப்படி என்ன சாப்பிடுது, எவ்வளவு சாப்பிடுது? 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் முதல் 3 லட்சத்து 73 ஆயிரம் நுண்பாசிகளைச் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறதாம். கோப் (Cope) என்ற கிரேக்க வார்த்தைக்கு, 'பாதம்' என்று பொருளாம்.
பெரிய உலகில், சின்ன உயிரின் சிறப்புகள்!
