உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 20, 2018

அ நிறம் | அளவு
மும்பையில் கடந்த வாரம், தித்வாலா பகுதியில் இருந்து சத்ரபதி சிவாஜி டெர்மினலை நோக்கி, பெரும் கூட்ட நெரிசலுடன் புறநகர் இரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது, இரயிலின் மின்விசிறி மீது பச்சைப் பாம்பு இருந்துள்ளது. இதைக் கவனிக்காமல் பயணிகள் உள்ளே ஏறிவிட்டனர். ரயில் புறப்பட்ட பின்னர்தான், அந்தப் பெட்டியில் பாம்பு இருப்பதை அவர்கள் பார்த்தனர். ரயில் சென்று கொண்டிருந்ததால், இறங்கவோ, ஓடவோ முடியாமல் பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். பாம்பு அவ்வப்போது அவர்களை நோக்கிச் சீறியதால், பீதியில் அலறித்துடித்தனர். அடுத்த இரயில் நிறுத்தம் வந்தவுடன், எல்லாப் பயணிகளும் இறங்கி ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
