தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/51% மதிப்பெண் பெற்ற மகன்; விழா எடுத்து அசத்திய தந்தை

51% மதிப்பெண் பெற்ற மகன்; விழா எடுத்து அசத்திய தந்தை

51% மதிப்பெண் பெற்ற மகன்; விழா எடுத்து அசத்திய தந்தை


PUBLISHED ON : மே 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், பெனாகனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவர் அசோக். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 51 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். இத்தகவலை கேட்ட அவரது தந்தை, 20 கிலோ இனிப்பு வாங்கி, கிராமத்தினருக்கு வழங்கி கொண்டாடினார். மேலும், பேண்டு வாத்தியம், தோரணம், மாலை மரியாதை என்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, மகனுக்காகப் பாராட்டு விழாவும் நடத்தினார். இதுதொடர்பாக, அசோக்கின் தந்தை கூறியதாவது, '6 ஏக்கர் நிலம் உடைய விவசாயி நான். என் குடும்பத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையும் முதல் ஆள் என் மகன். இதை எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டேன்' என்றார். பிள்ளைகள் 95 சதவீதம் மதிப்பெண் எடுத்தாலும், போதவில்லையே என்று வருத்தப்படும் பெற்றோர் மத்தியில், 51 சதவீத மதிப்பெண்ணுக்காக, கிராமத்தையே விழாக்கோலம் பூணவைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us