தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இது நம்பர் ரகசியம்!

இது நம்பர் ரகசியம்!

இது நம்பர் ரகசியம்!


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளையாட்டு நட்சத்திரங்களின் 'ஜெர்ஸி நம்பருக்கு' சுவாரஸ்யப் பின்ணணி இருக்கிறது.

* விராட் கோஹ்லியின் தந்தை 2006 டிசம்பர் 18ல் மரணமடைந்தார். அப்போது, கோஹ்லியின் வயது 18. இதனால், அதையே தனது ஜெர்ஸி எண்ணாக மாற்றிக் கொண்டார்.

* வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கெய்ல். 2010 நவம்பரில் நடந்த இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் 333 ரன்கள் குவித்தார். இதன் பின், ஐ.பி.எல். தொடரில் மட்டும் (பெங்களூரு அணி) '333' எண் பொறித்த ஜெர்ஸியை அணிய ஆரம்பித்தார்.

* உலக கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்திய பீலே (பிரேசில்), மாரடோனா (அர்ஜென்டினா) 'எண் 10' பொறித்த ஜெர்ஸியை அணிந்திருந்தனர். இதனால், இந்த எண் பிரபலமானது. இந்த வழியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சச்சினும் பின்பற்றினார். ஆரம்பத்தில் '99' எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்த இவர்,

பின் '10'க்கு மாறினார்.

* போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் ஜெர்ஸி எண் 7. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் 2003ல் இணையும்வரை, 'எண் 7' முன்னாள் வீரர் டேவிட் பெக்காமிடம் இருந்தது. இதை அணிந்தால், ராசி என அணி மேனேஜர் கூறியதால் ரொனால்டோ ஏற்றுக் கொண்டார்.

இந்திய 'கூல்' கேப்டன் தோனியின் ஜெர்ஸி எண் 7. ஜூலை 7, 1981ல் பிறந்ததால் எண் 7ஐ ராசியாக மாற்றிக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us