PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இடுக்கியை ஒட்டி, சுமார் 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு, 2013ஆம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 40 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் மீண்டும் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதற்காக, சரணாலயத்தில் புலிகள் நடமாட்டமிக்க முக்கிய பகுதிகளில், 504 டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவில், 180 டிகிரி விரிவான லென்ஸ் இருப்பதால், எந்த மிருகங்கள் கடந்து சென்றாலும் அதன் புகைப்படத்தை கச்சிதமாக எடுத்துவிடும். வரும் நவம்பர் மாதம் 17ஆ-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
http://liveday.in/
