PUBLISHED ON : மே 16, 2016
அ நிறம் | அளவு
'கிரிக்கெட்டின் குரல்' என போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீசின் டோனி கோசியர், மரணம் அடைந்தார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த இவர், எழுத்தாளர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முகத் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது வர்ணனை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக மரணமடைந்தார்.
