PUBLISHED ON : ஜூன் 17, 2019

இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் ஃபேஷனாக இருப்பது பச்சை குத்திக் கொள்ளுதல் (Tattoo - டாட்டூ). விதவிதமான டிசைன்கள், படங்கள், பெயர்கள் போன்றவற்றை டாட்டூவாக வரைந்து கொள்ளலாம். பொதுவாக, முன் கைகள், மணிக்கட்டு, தோள்பட்டை, மார்பு என விருப்பமான பாகங்களில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். கட்டத்தில் இருக்கும் ஜெர்சி எண்களை வைத்து டாட்டூக்கு உரிய கிரிக்கெட் வீரரைக் கண்டுபிடிக்கவும்.
கடவுளின் கண் : 'நடக்கும் அனைத்தும் யாரோ ஒருவரால் எப்போதும் பார்க்கப்படுகிறது. எனவே, இது வாழ்க்கையின் சாரத்தையும் மனிதர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வைக்கிறது'.
அமைதி: சமாதானம், அன்பு, நல்லிணக்கம் போன்றவற்றைக் குறிக்கும் இந்தச் சின்னம் பிரச்னைகளை மறந்து வாழ்க்கையில் அமைதி காண உதவுகிறது.
ஆண் குதிரை: குதிரைகளை நேசிக்கிறார் இந்த ஆல்ரவுண்டர். குதிரை போல விரைவாகச் செயற்படுவதற்காக முன்கையில் இதனைக் குத்தி இருக்கிறார்.
விடை:
விராத் கோலி
ஹர்திக் பாண்ட்யா
ரவீந்திர ஜடேஜா
