PUBLISHED ON : ஜூலை 29, 2019

'நீட்'டைப் பற்றி தேவையற்ற பயம் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. தற்போது, பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி மாணவர்களின் எண்ணங்களை அறிய, திருவள்ளூர் மாவட்டம், பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம்..
ஹோவர்தன் (11ஆம் வகுப்பு)
இப்பவே, ஸ்கூல் டைம் முடிஞ்சு ஸ்பெஷல் கிளாஸ் நடத்திட்டிருக்காங்க. இதில் நீட் தேர்வுக்கும் பயிற்சின்னு தொடங்கினா, நாங்க வீட்டுக்கு எத்தனை மணிக்குப் போறது? இது ஸ்டூடன்ஸுக்கு கூடுதலான பாரம்; ஆனாலும் எதிர்காலம் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்!
ஸ்ரீஹரி (11ஆம் வகுப்பு)
மாலை முழுதும் விளையாட்டுன்னு பாரதியார் பாடியிருக்காரு. இப்போ அதுக்கு வாய்ப்பில்லை. சாயங்காலம் கொஞ்ச நேரம் பிரெண்ட்ஸ்கூட சேர்ந்து அரட்டை அடிப்போம். இப்போ நீட் பயிற்சி வகுப்புகளையும் ஸ்கூல்ல தொடங்கினா, மாணவர்களோட மகிழ்ச்சி பறிபோயிடும்.
ஜெபஸ்டின் ராஜன் பால் (11ஆம் வகுப்பு)
தனியார் நீட் பயிற்சி மையங்களைப் போல ஸ்கூல்ல டிரெய்னிங் கொடுக்கிறது சாத்தியம் கிடையாது. ஒருவேளை தனியாரைப்போல ஆசிரியர்களை வெச்சு பயிற்சி கொடுத்தா பள்ளிகள் சிறந்த இடம்தான். இதில் ஸ்டூடன்ஸுக்கும் அலைச்சல் குறைவு.
ஜெயதர்ஷினி (11ஆம் வகுப்பு)
நீட் பயிற்சியை பள்ளிகளில் தொடங்கறது நல்லதுதான். எல்லோரும் கத்துக்கற வாய்ப்பு வேணும். அப்படியில்லாமல், வசதி இருக்கறவங்களுக்கு மட்டுமே நீட் பயிற்சிங்கிற நிலை இருக்கக்கூடாது.
தேவிஸ்ரீ (12ஆம் வகுப்பு)
பள்ளியில் நீட் பயிற்சி யூஸ்ஃபுல்லானதுதான். ஏன்னா, பாதுகாப்பான இடம், சந்தேகங்களை தயக்கம் இல்லாம கேட்க முடியும். நீட்டுக்குன்னு தனி வகுப்புக்குச் போகிற அலைச்சல் மிச்சம்.
சக்தி ஓவியா (12ஆம் வகுப்பு)
ஸ்கூல் வகுப்புகளோடு நீட் பயிற்சி வகுப்பையும் இணைச்சிடலாமே! ஸ்கூல் டைம் தாண்டி தனியாகப் பயிற்சி அளிப்பதால், படிப்பு சுமையாக மாற வாய்ப்பு இருக்கு.
