தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இரண்டு வாய் பறவை!

இரண்டு வாய் பறவை!

இரண்டு வாய் பறவை!


PUBLISHED ON : அக் 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் அரிய வகைப் பறவை இனம் 'இருவாய்ச்சி பறவை' (Hornbill - ஹார்ன்பில்). இந்தப் பறவையின் அலகுக்கு மேலே உள்ள 'காஸ்க்' (Casque) என்ற கொண்டை அமைப்பு, பார்ப்பதற்கு இரண்டு வாய்கள் இருப்பதைப் போன்று தோற்றம் தரும். ஒரு காலத்தில் இந்தப் பறவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் முழுவதும் பரவி இருந்தது. கேரளாவின் மாநிலப் பறவை 'இருவாய்ச்சி'. காடுகள் அழிக்கப்படுவதாலும், சுற்றுலாப் பகுதிகளாக மாற்றப்படுவதாலும், தற்போது இது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இருவாய்ச்சி பறவை (Hornbill Bird - ஹார்ன்பில் பேர்டு) - மேற்குதொடர்ச்சி மலைகளில் வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம் ஆகிய வனப்பகுதிகளில் காணப்படும்.

54 உலகம் முழுவதும் வாழும் இருவாய்ச்சி பறவை வகைகள்

9 இந்தியாவில் வாழும் இருவாய்ச்சி பறவை வகைகள்

4 தமிழகத்தில் வாழும் இருவாய்ச்சி பறவை வகைகள்

வாழ்நாள் 30 - 40 ஆண்டுகள்

நாக்கு குட்டையாக இருப்பதால், இவற்றால் இரையை விழுங்க இயலாது. உணவை அலகின் நுனியில் இருந்து தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.

வாழ்க்கை முறை

* உயரமான மரப் பொந்துகளில் கூட்டை அமைக்கும்.

* இறக்கைகளை உதிர்த்து அதன் மேல் முட்டை இடும்.

* 1 முதல் 7 முட்டைகள் இடும்.

* 7 வாரங்களில் முட்டைகள் பொரிந்துவிடும்.

* குஞ்சுகளுக்கு ஆண், பெண் பறவை இரண்டும் உணவு ஊட்டும்.

தமிழகத்தில் காணப்படும் வகைகள்

1. பெரும் பாத இருவாய்ச்சி (Great Pied Hornbill - கிரேட் பைட் ஹார்ன்பில்)

2. மலபார் இருவாய்ச்சி(Malabar Hornbill - மலபார் ஹார்ன்பில்)

3. சாம்பல் நிற இருவாய்ச்சி (Grey Hornbill - கிரே ஹார்ன்பில்)

4. மலபார் பாத இருவாய்ச்சி (Malabar Pied Hornbill - மலபார் பைட் ஹார்ன்பில்)

உணவு

'ஃபைகஸ்' (Ficus) என்ற தாவர இனத்தின் ஆல் அத்திப் பழங்கள், சிறு பூச்சிகள்

- பழ.கோபி, எழுத்தாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us