உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 01, 2018

அ நிறம் | அளவு
'பில் & மெலிண்டா கேட்ஸ்' அறக்கட்டளை, சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அக்கருத்துக் கணிப்பில், 2,800 இந்தியர்கள் உட்பட 40,000 இளைஞர்கள் பங்கேற்றனர். அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 86 சதவீத இந்தியர்கள், நாட்டின் வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 50 சதவீத இந்தியர்கள் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தே அதிகம் கவலை கொள்கின்றனர். இந்தியா மற்றும் நைஜீரிய இளைஞர்களில் பெரும்பான்மையினரின் கவலை, வேலையின்மையைப் பற்றியே உள்ளது. உலக அளவில், பாதுகாப்பு குறித்தே அதிக மக்கள் கவலைப்படுகின்றனர். கல்வியறிவு பரவலாகாதது குறித்தும் இந்தியர்கள் கவலைப்படுவதாக, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
