தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செவ்வாயில் வர்ச்சுவல் வாக்கிங்

செவ்வாயில் வர்ச்சுவல் வாக்கிங்

செவ்வாயில் வர்ச்சுவல் வாக்கிங்


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

நாசாவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்து, செவ்வாய் கிரகத்தின் பரப்புகளில் நடப்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தும் மெய்நிகர் சுற்றுலாவை (Virtual Tour)நடத்த இருக்கின்றன. ஃபுளோரிடாவில் இருக்கும் நாசா கென்னடி விண்வெளி மையத்தின் பார்வையாளர் அரங்கத்தில் இந்த மெய்நிகர் சுற்றுலா நடைபெற இருக்கிறது. கடந்த 2012ல் இருந்து ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பரப்புகளைப் பதிவு செய்து அனுப்பிய காட்சிகள் முப்பரிமாண அரங்கில் ஓடிக்கொண்டிருக்கும். அந்த அரங்கிற்குள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வடிவமைத்த பிரத்யேக 'ஹாலோலென்ஸ்' கண்ணாடியை அணிந்து செல்லும் பார்வையாளர்களுக்கு செவ்வாயில் நடக்கும் மெய்நிகர் அனுபவம் கிடைக்கும். ஹாலோ லேசர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட விண்வெளி வீரர்களின் உருவங்கள், பார்வையாளர்களை நடத்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us